குளிர் காலநிலையுடன் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம்

நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.  கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே குறிப்பிடுகையில், சிறுவர்கள் மத்தியில் இந்த நோய்கள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.  “இந்நாட்களில் நிலவும் குளிர் மற்றும் வறண்ட வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் அதிகரிக்கலாம். எமது சுவாசத் தொகுதியின் மேற்பகுதியையே இந்த வைரஸ்கள் பெரும்பாலும் பாதிக்கின்றன. பொதுவாக இந்த வைரஸ் நோய்கள் முன்பள்ளி வயதுடைய சிறுவர்கள் மத்தியில் அதிகமாகப் பரவக்கூடும். […]

போதைப்பொருள் சுற்றிவளைப்பு: தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

2026 ஆம் ஆண்டில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படவுள்ள போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்காக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு பொலிஸாரால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள ஹெரோயின், ஐஸ், கொகெய்ன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட விஷ போதைப்பொருட்கள் தொடர்பில், புதிய வழிமுறைகள் ஊடாக பிராந்திய பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு நேரடியாகத் தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கிறது.  அதற்கமைய, கீழே உள்ள தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பொலிஸ் பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்குத் தகவல்களை வழங்க முடியும்.  பிராந்திய […]

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் பலி!

யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் (19) உயிரிழந்தார்.  அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார்.  இவருக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை இரத்த வாந்தி எடுத்துள்ளார்.  பின்னர் காலை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.  அவர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண […]

மண்புழு உரம் தயாரிப்பு!

தற்கால விவசாயத்தில் அதிகளவாக மண்புழு உரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ் உரத்தினை அதிகளவான அளவிலும் தமது வீட்டு தேவைக்காக சிறிய அளவிலும் பலர் உற்பத்தி செய்கின்றனர். மண்புழுக்கள் தயாரிக்கும் உரமானது நைதரசன், பொஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்ததாக இருப்பதோடு, கரிமப் பொருட்களின் சிதைவூக்கத்திற்கு சிறந்ததாகவும் காணப்படுகிறது.மண் வளம்சேர்க்கை, மண்ணின் நீர்த்தாங்கும் திறன் அதிகரிப்பு, மண்ணை துளையாக்கி காற்றோட்டத்தை அதிகரித்தல், நீண்டகாலத்திற்கு மண் சுகாதாரத்தை காத்தல், வேளாண்மை விளைச்சலை அதிகரித்தல், வேர் வளர்ச்சியை ஊக்குவித்தல், தாவரங்களுக்கு தேவையான […]

புதிய பயங்கரவாத சட்டத்திற்கு ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் எதிர்ப்பு

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக ‘ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்’ (Human Rights Watch) அமைப்பு தெரிவித்துள்ளது.  அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைப்பு சுட்டிக்காட்டுவது யாதெனில், இந்த புதிய சட்டமூலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என்பதாகும்.  இது ஜீ.எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கிய மனித உரிமைகள் பாதுகாப்பு உடன்பாடுகளுக்கு அமைவானது அல்ல எனவும் […]

துப்பாக்கிச் சூடு பெண் உட்பட ஐவர் கைது!

ஜிந்துபிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்து, இரண்டு பிள்ளைகளுக்கு காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று (19) மற்றும் நேற்று முன்தினம் (18) ஆகிய தினங்களில் கரையோரப் பொலிஸ் நிலைய (Foreshore Police) அதிகாரிகளால் ஜிந்துப்பிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அதற்கமைய, இக்குற்றத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் 4 […]

அஸ்வெசும விவாதம் இன்று பாராளுமன்றத்தில்

நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டம் தொடர்பான விவாதம் இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.  இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை இவ்விவாதம் நடைபெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.  இவ்வார நடவடிக்கைகளுக்காக இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.  ‘திட்வா’ புயலை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தம் இன்மை தொடர்பில் முழுமையான ஆய்வை மேற்கொண்டு அறிக்கையிடவும், அது தொடர்பான தமது முன்மொழிவுகள் […]

உலகின் சிறந்த தேனிலவு இடங்களில் 3 இடங்களைப் பிடித்த இலங்கை!

2026 ஆம் ஆண்டில் உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த 25 இடங்களில் 3 இடங்களைப் பெற்றுக்கொள்ள இலங்கை பெற்றுள்ளது.  உலகப் புகழ் பெற்ற சுற்றுலா ஆலோசனை நிறுவனமான ‘ட்ரிப் அட்வைசர்’ (TripAdvisor) வெளியிட்ட அண்மைய அறிக்கைக்கு அமைய இந்த இடங்கள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதற்கமைய, உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த இடங்களுக்கு மத்தியில் 5 ஆவது இடம் காலி நகருக்குக் கிடைத்துள்ளது.  அந்த அறிக்கையில் 13 ஆவது இடம் எல்ல (Ella) நகருக்கும், 22 ஆவது இடம் […]

28 கோடிக்கும் அதிக பணத்துடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 283,300,000 ரூபா பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபர் ஒருவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.  வெளிநாட்டில் மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் இந்த சந்தேக நபர் தொலைபேசி மூலம் தொடர்புகளை […]

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.