துறைமுக நகரில் சீன நாட்டவர் கொலை! தலைமறைவாகியிருந்த மேலும் இருவர் கைது

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சீன நாட்டவர்களை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் சீகிரிய பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை 23 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டிருந்தார். பின்னர், அவரது சடலம் எஹெலியகொடை பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது. […]
வெனிசுலாவின் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் வளம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள்

வெனிசுலாவின் எண்ணெய் இருப்புகளில் 65 பில்லியன் பீப்பாய்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா, வெனிசுலாவுடன் பிரம்மாண்டமான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலாவின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் இதுவென்றும் ஜனாதிபதி டிரம்ப் தனது […]
தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல்

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று பிற்பகல் (28) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட போதகர் செபஸ்டியன், திருச்சபையின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். இந்நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால், தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்களின் […]
நேபாள வெள்ளம்: இந்திய நதிகளில் மிதந்த சடலங்கள்

நேபாளத்தைத் தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் தெற்குப் பகுதியான சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் ஆகிய மாவட்டங்கள் ஊடாகப் பாயும் நதிகளில் மிதந்த நிலையிலேயே இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளப்பெருக்கு காரணமாகவே இச்சடலங்கள் இந்தியாவை நோக்கி அடித்து வரப்பட்டிருக்கலாம் என மகாராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் கெளரவ் சிங் சோகர்வால் […]
மன்னாரில் கனிமவள அகழ்வுக்கு புதிய நடைமுறை

மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிமவளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையிலான நடைமுறைகள் குறித்த விசேட கலந்துரையாடல், நேற்று (28) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், பிரதேச சபை தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கடந்த காலங்களில் கருங்கல், கிரவல் மற்றும் […]
கொலையில் முடிந்த சகோதரர்களுக்கு இடையேயான தகராறு

தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹகொட பகுதியில் நபர் ஒருவர் தடியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த நபர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (28) இரவு வேளையிலேயே இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மஹகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தங்காலை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதே […]
கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு!

பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய, கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலையை 17 ரூபாவால் உயர்த்த அந்நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, உயர்த்தப்பட்டுள்ள கோதுமை மாவின் விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு வரும் திங்கள்கிழமை (31) கூடுவதெனத் தீர்மானித்துள்ளது. […]