தமிழ் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விசேட விடுமுறை!

நாளை  8 கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த மாகாணங்களின் ஆளுநர்களால், மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படவுள்ள  இந்த விசேட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 14 ஆம் திகதி  சனிக்கிழமை பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கொழும்பு தேசிய வைத்தியசாலை நீரில் மூழ்கியமைக்கான காரணம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியமைக்கு, கொழும்பு மாநகர சபையினால் நொரிஸ் கால்வாய் சரிவர சுத்திகரிக்கப்படாமையும் முறையாக பராமரிக்கப்படாமையுமே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று (06) பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக கொழும்பு நகரின் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கின. மழையுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு, வெளிநோயாளர் பிரிவு, கதிரியக்க பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள் மற்றும் […]

நாட்டில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு!

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் ஒருசில இடங்களில் இன்று (7) மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளையில் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என திணைக்களம் அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் […]

அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசு கட்சிக்கு பின்ன

அளிப்பதிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். உலகப் பொருளாதாரத்திலும் சர்வதேச அரசியல் உறவுகளிலும் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவின் பாராளுமன்ற கட்டமைப்பு மாறுவது உலக நாடுகளாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க பாராளுமன்ற இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி முன்னிலை வகிப்பது அந்நாட்டு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முழுமையான இறுதி முடிவுகள் வெளியாகும் வரை தேர்தல் களம் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளது.

அக்குறணை – குடுகலையில் வர்த்தக நிலையத்தில் 

அக்குறணை, குடுகலை பகுதியில் உள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் இன்று (04) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ விபத்து காரணமாகப் பிரதான வீதியின் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், தற்போது தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், இச்சம்பவம் தொடர்பாகக் கடுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இனி பணத்தைச் சேமிக்க வேண்டிய அவசியமே இருக்காதா? எலான் மஸ்க்கின் எதிர்காலக் கணிப்பு

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்களின் அபரிமிதமான வளர்ச்சி எதிர்காலப் பொருளாதாரத்தையே முற்றிலும் மாற்றியமைக்கக்கூடும் என உலகப் பெரும் தொழில்நுட்பத் தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.AI மற்றும் ரோபோக்கள் பெரும்பாலான மனித வேலைகளைச் செய்யும் நிலை உருவானால், பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி பாரிய அளவில் அதிகரித்து, மக்களின் அத்தியாவசியத் தேவைகளை மிக எளிதாகப் பூர்த்தி செய்யக்கூடிய சூழல் உருவாகலாம் என்பது அவரது கணிப்பாகும்.இனி பணத்தைச் சேமிக்க வேண்டிய அவசியமே இருக்காதா? எலான் மஸ்க்கின் எதிர்காலக் […]

புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கமைய பாடசாலை கால அட்டவணையில் மாற்றம்

புதிய கல்விச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கு இணையாக, பாடசாலை நேர அட்டவணைகளைத் தயாரிப்பது தொடர்பாகக் கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் கையொப்பத்துடன் இச்சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டில் முதலாம் தரத்தில் தொடங்கப்பட்டுள்ளதுடன், 2027 ஆம் ஆண்டில் 2 ஆம் மற்றும் 6 ஆம் தரங்களுக்கும், 2028 ஆம் ஆண்டில் 3 ஆம் மற்றும் 7 ஆம் தரங்களுக்கும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 2029 ஆம் ஆண்டில் […]

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபை தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நேற்று திடீரென மீண்டும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில், அவருக்கு சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதையடுத்து, சில வாரங்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற அவர், பின்னர் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிபருக்கு வழங்கப்பட்ட முறையற்ற இடமாற்றத்திற்கு இடைக்காலத் த

ஆனமடுவ – முதலக்குளிய விஜய மகா வித்தியாலயத்தின் அதிபருக்கு வழங்கப்பட்ட முறையற்ற இடமாற்றத்தை இடைநிறுத்தி, புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் வடமேல் மாகாண பிரதம அமைச்சுச் செயலாளருக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​புத்தளம் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயலத் சி. சில்வா, மனுதாரரான அதிபருக்கு இடமாற்றம் வழங்கி வடமேல் மாகாண பிரதம அமைச்சுச் செயலாளர் விடுத்த கடிதத்தை வலுவற்றதாக்கும் வகையில் இடைக்காலத் தடை உத்தரவு […]

நவம்பரில் 3 சமையல் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையும்!

2026 நவம்பர் மாதத்திற்குள் நாட்டுக்கு 3 சமையல் எரிவாயு கப்பல்களைக் கொண்டுவருவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தவிர, ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள தமது எல்.பி.ஜி முனையத்தை உள்நாட்டுச் சந்தைக்கு எரிவாயு விநியோகிப்பதற்காகப் பயன்படுத்துவதற்குரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய எரிவாயு விநியோகத் தடைகள் காரணமாக நுகர்வோர் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து தமது வருத்தத்தைத் தெரிவித்துள்ள லாஃப்ஸ் நிறுவனம், விநியோகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்குத் […]