ஞானசார தேரருக்கு எதிராக இன்றும் பிடியாணை

கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றால் இன்று (30) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரு கொலைச் சம்பவங்களில் மூவர் பலி

கடந்த 24 மணி நேரத்திற்குள் கடுகன்னாவ மற்றும் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுகளில் இரண்டு மனிதக் கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (29) இந்தக் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இம்புலஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் 75 வயதுடைய பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, வீட்டில் இருந்து உயிரிழந்த பெண்ணின் கணவரால் எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, […]
தொழில்சார் நிபுணர்களுக்கு நீதியான வரிக் கொள்கை அவசியம்

வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில்சார் நிபுணர்களுக்கு நியாயமான மற்றும் நீதியான வரிக் கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. மொத்த அரச வரி வருவாய்க்கு எவ்வித பாதகமான தாக்கமும் ஏற்படாத வகையில், வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில்சார் நிபுணர்களுக்கு நியாயமான வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக, இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்காக ஜனாதிபதியிடம் பல தொழிநுட்ப மற்றும் பகுப்பாய்வு ரீதியான முன்மொழிவுகளைத் தமது சங்கம் சமர்ப்பித்துள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் […]
விரிசலுக்கு பின் முதன்முறையான சந்தித்த UAE – சவூதி அதிகாரிகள்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணைத் ஜனாதிபதி ஷேக் மன்சூர் பின் சையத் அல் நஹ்யான் நேற்று சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்து, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை சந்தித்துள்ளார். கடந்த ஆண்டு இரு வளைகுடா நாடுகளுக்கும் இடையே ஆழமான விரிசல் ஏற்பட்டதன் பின்னர், ஐக்கிய அரபு இராச்சியத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் சவூதி அரேபியாவிற்கு மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும். சவூதி பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் […]
சவாலுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்த்திரம் – இலங்கைக்கு ஐ.நா பாராட்டு

இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். 81 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு இணையாக நியூயோர்க் நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார மீட்பு மற்றும் சீர்திருத்த வேலைத்திட்டங்கள், அத்துடன் தேசிய நல்லிணக்கத்திற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு அதிக ஆதரவை வழங்கும் நோக்குடனான சர்வதேச […]
பத்தேகம துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது

பத்தேகம, ஹல்பாதோட்ட பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் மீது காரில் பிரவேசித்த குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, குறித்த குற்றச்செயலுக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்த சந்தேகநபர் நேற்று (29) இரவு ஹல்பாதோட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் இருந்த 06 கிராம் மற்றும் 100 மில்லிகிராம் ஹெரோயினும் பொலிஸாரால் […]
புறக்கோட்டையில் அதிரடி சோதனை : 801 பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்

புறக்கோட்டைப் பகுதியில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய விசேட சோதனையின் போது 801 போத்தல்கள் வழக்குப்பொருட்களாகக் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த போத்தல்கள் தொடர்பில் விசேட சோதனைகளும் விசாரணைகளும் நடத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முடிவடைந்த பின்னர் குறித்த வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. குடிநீரைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களுக்கு […]
ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள்

20 ஆண்டுகளுக்கு பின் ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுதும் வெளியேறுவது அண்டை நாடான ஈரானுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ஈராக்கின் உள்நாட்டு பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியுள்ளது. அணு ஆயுதங்கள் மற்றும் இரசாயன ஆயுதங்கள் போன்ற பேரழிவு ஆயுதங்களை ரகசியமாக தயாரிப்பதாகக் கூறி, மேற்காசிய நாடான ஈராக் மீது, 2003ல் அமெரிக்கா போர் தொடுத்தது. கைது செய்யப்பட்ட ஈராக் அதிபராக இருந்த சதாம் உசைன், 2006ல் துாக்கிலிடப்பட்டார். ஈராக் உடனான போருக்கு பின் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் […]
ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (30) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் அழைக்கப்படவுள்ளது. அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அது தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. இதற்கமைய, […]
செப்டம்பரில் நாணயக் கொள்கையில் மாற்றமில்லை

இலங்கை மத்திய வங்கி தமது நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தினை 8.75 ஆக தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணய கொள்கைச் சபை கூடிய போதே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் தொடர்ந்தும் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில் உள்நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளை கருத்திற் கொண்டு இந்த […]