ஷமோண்டா கால்நடை வைரஸ் மனிதனைத் தாக்கியது

கால்நடைகளைப் பாதிக்கும் ஷமோண்டா (Shamonda) வைரஸ் மனிதர் ஒருவர் உடலில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் கடந்த மாதத் தொடக்கத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் ​நேற்று (22) உறுதிப்படுத்தியுள்ளனர்.மனிதரைக் கால்நடை நோய் தாக்கியுள்ள முதல் சம்பவம் இதுவென்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.”ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் பல தசாப்தங்களாகப் பரவி வந்தாலும், ஷமோண்டா வைரஸ் இதற்கு முன்னர் மனிதர்களில் கண்டறியப்பட்டதே இல்லை” என்று பிரான்ஸ் சுகாதார மற்றும் விவசாய அமைச்சுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.”தற்போது பொதுமக்களுக்கு எந்தவிதமான சுகாதார அச்சுறுத்தலும் கண்டறியப்படவில்லை” என்று தெரிவித்த அவர்கள், இந்த மனிதத் தொற்று என்பது “கடுமையாக நோயெதிர்ப்புச் சக்தி குறைந்த (immunocompromised) ஒரு நோயாளியைப் பாதித்த ஒரு விதிவிலக்கான நிகழ்வாகும்” என்றும் சேர்த்துக் கொண்டனர்.இந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.”தற்போதைய தகவல்கள் மற்றும் நெருங்கிய தொடர்புடைய பிற வைரஸ்களின் பரவல் குறித்த அறிவின்படி, இது ஒரு தனிப்பட்ட மனிதத் தொற்றாகும், மேலும் இது தற்போதைய நிலையில் பரவலாகப் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு” என்று உலக சுகாதார அமைப்பு ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.